ஈரானின் பார்வையில், யுரேனியம் செறிவூட்டலை தடை செய்யும் பிரச்சினையில் எந்த பேச்சுவார்த்தையும் இருக்க முடியாது. யுரேனியம் செறிவூட்டல் ஈரானின் உரிமை, அது நிச்சயமாக தொடர வேண்டும் என்று கூறினார்.
குண்டுவீச்சு மூலம் கூட அமெரிக்காவால் இப்பகுதியில் ஈரானின் திறன்களை அழிக்க முடியாது என்று அவர் கூறினார்.
இருப்பினும், இந்த பிரச்னையில் அமெரிக்காவுடன் ‘உறுதியளிக்கும்’ ஒப்பந்தத்தை எட்ட ஈரான் தயாராக உள்ளது என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.
ஈரானின் ஏவுகணை திட்டத்தைப் பற்றி பேசிய அராக்சி, இப்போதும் சரி எதிர்காலத்திலும் சரி ஏவுகணைகள் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இருக்க முடியாது, ஏனெனில் இது ஒரு பாதுகாப்பு பிரச்சினை என்று மீண்டும் வலியுறுத்தினார்.
ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அப்துல்ரஹீம் மூசவி, ஈரானுக்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் எதிரிகளுக்கு பாரமாக இருக்கும் மற்றும் அவர்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறினார.;
மேலும் அவர் பேசுகையில் எந்தவொரு இராணுவ ஆக்கிரமிப்பும் அவர்களின் மூலோபாய தோல்வியில் முடியும் என்பதையும், இது போரின் எல்லையை முழு பகுதிக்கும் பரப்பும் என்பதையும் எதிரி நன்கு அறிவார். என்றார்.

















