9ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு: 20 Oct 1950
இறப்பு: 19 May 2016
பிறந்த இடம் : தொம்பை வீதி, உடுவில் கிழக்கு சுன்னாகம்
வாழ்ந்த இடம் : தொம்பை வீதி, உடுவில் கிழக்கு சுன்னாகம்
காற்றோடு கலந்த கண்ணீர் துளிகளுடன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில்
20.10.1950
இறைவன் அடியில்
19.05.2016
அமரர் கணேஸ்வரி நாகரத்தினம் (தேவி)
திதி – திரயோதசி (09.06.2025)
ஆண்டுகள் ஒன்பதாகியது அம்மாவைப் பிரிந்து . . . !
வையகம் போற்ற வாழ்ந்து
வானுறையும் தெய்வமதாய்
இயற்கையில் இணைந்து
பழுதில்லாப் புதுமலராய் – என்றும்
எம் இதயங்களில் மணம் வீசும் அன்பு நிறை அம்மாவே!
ஆண்டுகள் ஒன்பது ஆனதே பிரிந்து
உயர் குணமேவிய திருவுருவாய் வழிகாட்டி
நிலவொளியாய் குளிர்மை தந்து – தினம்
எமையெல்லாம் மனதாற்றி
அகவொளியாய் நிறைமதியாய்
குறை நிறைகள் எடுத்தியம்பி
நல்வழிகாட்டிய உம் கருணையினை
பேறாகப் பெற்றோம் பெருமை கொண்டோம் . . . !
நீறாகிப் போனாலும் நீங்களே திசைகாட்டி
நித்திய வாழ்வினில் நீங்கா நிறையுரு …
அணையாது ஒருபோதும்
நாம் கொண்ட பாசம் . . .
தேயாமல் வளருமிது தெய்வீக பாசம் . . . !
இயற்கையின் அசைவுகளில் – உம்
உணர்வுகளை நுகர்ந்து
உம் பாதம் மலர் தூவி வணங்குகின்றோம்!
என்றும் நினைவுகளை சுமந்து நிற்கும்,
கணவன், பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், உறவினர்கள்.
தொம்பை வீதி,
உடுவில் கிழக்கு
சுன்னாகம்