2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை மரியா கொரினா மச்சாடோ வென்றுள்ளார். இவர் வெனிசுலா அரசியல்வாதி ஆவார்.

1967 ஆம் ஆண்டு பிறந்த இவர், வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வந்துள்ளார். அந்த நாட்டில் சர்வாதிகாரம் மாறி ஜனநாயகம் மலர இவர் முக்கிய காரணம்.
ஜனநாயகப் போராட்டங்களின் போது, இவர் பல நாள்கள் மறைந்து வாழ்வதாக இருந்தது. இவரது உயிருக்கு மிகுந்த ஆபத்து இருந்தாலும், அவர் தொடர்ந்து வெனிசுலாவிலேயே இருந்து, ஜனநாயகத்திற்காகப் போராடி வந்தார்.
இவர் அந்த நாட்டின் எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்து, போராட்டத்தை அமைதி முறையில் நடத்தி வெற்றியும் கண்டுள்ளார்.
இவருக்கு இந்தப் பரிசு வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படும்.
.

















