ரஷியா- உக்ரைன் இடையில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போரை முடிவுக்கு கொண்டுவர 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார். இதில் பெரும்பாலான அம்சங்களில் அமெரிக்கா- உக்ரைன் இடையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுக்கு விட்டுக் கொடுப்பதும், ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணுஉலையான சபோரிசியாவை ரஷியாவிடம் ஒப்படைக்கவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் மாற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் ரஷிய அதிபர் புதின், அந்நாட்டின் இராணுவ மையத்திற்கு திடீர் விஜயம் செய்துள்ளார். அங்கு அதிகாரிகளிடம் பேசும்போது ‘உக்ரைன் அமைதியை விரும்பவில்லை என்றால், ரஷியா இராணுவ வழியில் அனைத்து சிறப்பு இராணுவ நடவடிக்கைகள் மூலம் இலக்குகளை அடையும் எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்- ரஷியா எல்லையில் பாதுகாப்பு பகுதி தொடக்கம் சிறப்பான நடைபெற்று வருகிறது. ரஷியப் படைகள் டான்பாஸ் மற்றும் சபோரோசியே பிராந்தியத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

















