டுபாயில் நடைபெற்ற ஆசியக் கிண்ண சூப்பர் – 4 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் பெற்றது. சாஹிப்சாதா ஃபர்ஹான் 58 ஓட்டங்களுடன் சிறப்பித்தார். இந்தியா சார்பில் சிவம் துபே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் வெற்றி இலக்கான 172 ஓட்டங்களை இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து எட்டியது. அபிஷேக் ஷர்மா 74, ஷுப்மன் கில் 47 மற்றும் திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களை எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


















