அபுதாபியில் நேற்று இரவு நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தானை 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது.
இளம் துடுப்பாட்ட வீரர் தான்சித் ஹசன் அரைசதம் (52 ஓட்டங்கள்) எடுத்தார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 146 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.


















