இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா அணிகள் மோதும் 2 ஆவது ரி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 146 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், ரி-20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையை பிலிப் சால்ட் படைத்தார். இவர் 39 பந்தில் சதமடித்தார்.
ஏற்கனவே, லியாம் லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் சதமடித்திருந்தார். அந்த சாதனையை பிலிப் சால்ட் முறியடித்துள்ளார்.


















