2026 ரி-20 உலகக் கிண்ண தொடர் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய சாதனை படைத்துள்ளதாகத் ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா தெரிவித்தார்.
ரி-20 உலகக் கிண்ண வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்தியாவில் மட்டும் இந்தத் தொடரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 500 மில்லியனை (50 கோடி) கடந்துள்ளது. இது இதுவரை நடந்த அனைத்து ரி-20 உலகக் கிண்ணங்களையும் விட அதிகப்படியான பார்வைகளாகும்.
நேரலை ஒளிபரப்பில் டிஜிட்டல் தளம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு போட்டியை ஒரே நேரத்தில் 6.05 கோடி பேர் நேரலையில் பார்த்தது உலக சாதனையாகப் பதிவாகியுள்ளது.
இந்தத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியை மட்டும் சுமார் 16.3 கோடி பேர் டிஜிட்டல் தளத்தில் கண்டு களித்துள்ளனர்.
ஐ.சி.சி-யின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் வீடியோக்களின் எண்ணிக்கை 10 பில்லியன் பார்வைகளைத் தாண்டியுள்ளது. இது 2024 ஆஆம் ஆண்டு பதிவான 16 பில்லியன் என்ற சாதனையைத் தகர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பை 2026 தொடரை உலகளவில் அனைவரும் அணுகக்கூடிய ஒரு நிகழ்வாக மாற்ற வேண்டும் என்ற எங்களது இலக்கு நிறைவேறியுள்ளது. இந்திய ரசிகர்கள் விளையாட்டு மீது காட்டும் எல்லையற்ற அன்பே இத்தகைய சாதனைகளுக்குக் காரணம்.
நொக் அவுட் போட்டிகளிலும் ஆதரவு தெரிவித்து மேலும் புதிய சாதனைகள் படைக்க இந்திய ரசிகர்கள் துணை இருக்க வேண்டும் என கூறினார்.

















