13 ஆவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
இந்தூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பாட்டம் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 288 ஓட்டங்;கள் எடுத்தது. அந்த அணியின் ஹீதர் நைட் சிறப்பாக ஆடி சதமடித்து 109 ஓட்டங்கள் எடுத்தார். எமி ஜோன்ஸ் அரை சதம் கடந்து 56 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்தியா சார்பில் தீப்தி சர்மா 4 விக்கெட்டும், ஸ்ரீ சரனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 289 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரித் கவுர், தீப்தி சர்மா அரை சதம் கடந்தனர்.
இறுதியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 284 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புள்ளிப் பட்டியலில் 2 ஆவது இடத்துக்கு முன்னேறிய இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

















