இந்தோனேஷியாவில் உள்ள மௌண்ட் லெவோடோபி லக்கி-லாகி எரிமலை நேற்று வெடித்ததில் அதிலிருந்து சாம்பல் வானுயர 10 கிலோமீற்றர் உயரத்துக்குத் தூக்கி வீசப்பட்டதாக இந்தோனேஷியாவின் புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அனர்த்தம் தொடர்பிலான அதிகாரிகள் அதியுட்ச எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
இந்தோனேஷிய நேரப்படி எரிமலை அதிகாலை 1.35 மணிக்கு வெடித்ததாகவும், வெடிப்பு கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்களுக்கு நீடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எரிமலையிலிருந்து 6 கிலோ மீற்றர் முதல் ஏழு கிலோ மீற்றர் வரையிலான தூரம் உள்ள பகுதிகளுக்கு யாரும் செல்லக்கூடாது என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


















