ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும், ஆபத்தான கோபத்துக்கு பெயர் பெற்றவர்களாகவும் இருப்பார்களாம். அப்படிப்பட்ட ஆளுமைகொண்ட ராசியினர் யார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் தலைமைப் பதவியில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் ராஜாவாகத் தான் தோன்றுவார்கள்.
இவர்கள் உறவுகளிடடும் சரி, மற்றவர்களிடமும் சரி மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசத் தயங்க மாட்டார்கள்.
பெரும்பாலும் மனதளவில் பாசமானவர்களாக இருப்பார்ள். அனால் இவர்களுக்கு கோபம் வந்துவிட்டால் யாராலும் கட்டுப்படுத்த முடியாத மிருகமாக மாறிவிடுவார்கள்.
அவர்களின் இந்தக் குணம் பார்ப்பவர்களுக்கு மூர்க்கத்தனமாகத் தோன்றலாம். இருப்பினும், மேஷ ராசிக்காரர்கள் தங்கள் கடினமான சூழ்நிலைகளை திறமையாக சமாளிக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் நண்பனுக்கு தலைசிறந்த நண்பனாவும், எதிரிகளுக்கு மோசமான எதிரியாகவும் இருப்பார்கள்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் வாழ்வில் உண்மைக்கும், நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் பார்ப்பதற்கு அமைதியாகவும், மனஉறுதியுடனும் இருப்பார்கள். ஆனால் அவர்களின் வெளித்தோற்றத்தைப் பார்த்து அவர்களின் குணத்தை எடைபோட முடியாது. இவர்கள் தங்களுக்கு எது வேண்டும் என முடிவு செய்தாலும், அதை அடைய எந்த எல்லைக்கும் சென்று போராடுவார்கள்.
இவர்களிடம் மோசமான பிடிவாதமான குணம் இருப்பதால், அவர்களைக் கையாள்வது மிகவும் கடினமான விடயமாக இருக்கும். இவர்களை அதிகாரத்தால் கட்டுப்படுத்த நினைப்பது பெரிய முட்டாள்த்தனம்.
விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தீவிரமான மற்றும் மர்மமான இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களை நம்பி எந்த ரகசியத்தையும் சொல்லலாம். இறுதிவரை பாதுகாப்பார்கள்.
ஆனால் இவர்கள் ஒருவரை எதிரி என முடிவு செய்துவிட்டால் இவர்களுக்கு வாழும் போதே நரகத்தை காட்டிவிடுவார்கள்.
இவர்களின் சூழ்ச்சி மற்றும் பழிவாங்கும் குணம் மிகவும் மோசமானதாக இருக்கும். இது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை அமைப்புகளிலும் அவர்களை ஆபத்தானவர்களாக மாற்றுகின்றது. இந்த ராசியினரிடம் பகை வளர்ப்பது மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.


















