கும்பம்:
கும்பராசி அன்பர்களே!
தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். ஆனால், உடல் நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், சக ஊழியர்களின் உதவியுடன் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலுள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

















