இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
அந்தவகையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,171,066 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு 24 கரட் தங்க கிராம் 41,310 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் 330,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க 37,870 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் 302,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 36,150 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 289,200 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















