இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
அந்தவகையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது நேற்று சற்று குறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் குறைவடைந்துள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,168,244 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு 24 கரட் தங்க கிராம் 41,210 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 24 கரட் தங்கப் பவுண் 329,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்க கிராம் 37,780 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் 302,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 36,060 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 288,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















