மகரம்:
மகரராசி அன்பர்களே!
புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். ஒரு சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிலருக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப் பதால் சோர்வு ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது,
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

















