விருச்சிகம்:
விருச்சிகராசி அன்பர்களே!
தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். குடும் பத்தில் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.


















