முல்லா தன்னோட வியாபாரத்துக்காக ஒரு கழுதைய வளர்த்துக்கிட்டு வந்தாரு, அந்தக் கழுதைய தன்னோட சொந்த பிள்ளை மாதிரி வளர்த்துக்கிட்டு வந்தாரு,

தினமும் அத குளிப்பாட்டி, அதுக்கு சாப்பாடு வைச்சதுக்குப் பிறகுதான் அவரு சாப்புடுவாரு, அந்த அளவுக்கு அவர் அந்தக் கழுதைய நேசிச்சாறு.

ஒரு நாள் அவரோட வீட்டுத் திண்ணையில உக்காந்து இருந்தாரு முல்லா, அப்ப பக்கத்து தெருவுல வசிச்ச முல்லாவோட நண்பர் அங்க வந்தாரு,

முல்லா எனக்கு ஒரு உதவி வேணும்னு சொல்லிகிட்டே, முல்லா கிட்ட வந்து உக்காந்தாரு, என்ன உதவி வேணும்னு சொல்லுங்க, எந்த உதவினாலும் உங்களுக்கு செய்யுறேன்னு சொன்னாரு முல்லா

உடனே அந்த நண்பர் சொன்னாரு, என்னோட கழுதைக்கு உடம்பு சரி இல்லை இன்னைக்கு நான் வெளியூர் போக வேண்டிய சூழ்நிலை, அதனால இன்னைக்கு ஒருநாள் எனக்கு உங்க கழுதையை இரவல் கொடுங்க, நான் பயணம் போயிட்டு வந்ததும் உங்ககிட்ட திரும்பி கொடுத்துடறேனு சொன்னாரு

உடனே முல்லாவுக்கு திடுக்குனு ஆகிடுச்சு, அவருக்கு கழுதைய இரவல் கொடுக்குறதுல விருப்பமே இல்ல, ஆனா இரவல் கேக்குறது தன்னோட நண்பன் அவருகிட்ட இல்லைனும் சொல்ல முடியாது, இந்த சிக்கலான விஷயத்தை எப்படி தீர்க்குறதுனு யோசிச்சாறு, அப்பதான் அவருக்கு யோசனை கிடைச்சது,

உடனே என்னோட கழுதை இப்ப இங்க இல்ல, ஏற்கனவே என்னோட மாமா அந்த கழுதைய ஓசி வாங்கிட்டு போய்ட்டாரு, பத்து நாளைக்கு அப்புறம் தான் அது திரும்ப வரும்னு சொன்னாரு, இத கேட்ட நண்பர் மெல்லமா எழுந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சாரு,

சரியா அந்த நேரத்துல வீட்டுக்கு பின்னாடி கட்டி இருந்த கழுதை கனைக்க ஆரம்பிச்சுச்சு, இத முல்லா கொஞ்சம் கூட எதிர்பார்க்கள,

சந்தேகத்தோட முல்லாவ பார்த்த நண்பர்கிட்ட நீ என்ன நம்புறியா இல்ல என்னோட கழுதைய நம்புறியான்னு கேட்டாரு, இந்த கேள்வி அந்த நண்பரே தர்ம சங்கடத்தை ஏற்படுத்துச்சு,

இப்ப உங்கள நம்பலைன்னு சொன்னாலும் கழுதை கிடைக்காது, நம்புறேன்னு சொன்னாலும் கழுதை கிடைக்காதுனு புரிச்சிக்கிட்ட நண்பர் வேகமா அங்க இருந்து கிளம்பி போய்ட்டாரு,

எப்பவும் அரை மனசோட தானமோ உதவியோ செய்யக்கூடாதுனு நீதி வகுப்புகள்ல இந்த கதை சொல்ல படுது.

















