இலங்கை ஒரு புதிய தொழில்துறை வளர்ச்சி காலத்திற்குள் நுழைகிறது. வரும் Expo 2025 அந்த மாற்றத்திற்கான துவக்கமாகக் கருதப்படுகிறது. இந்த நிகழ்ச்சியும், எதிர்காலத் திட்டங்களும் பற்றி இலங்கைக் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தலைவர் ரவி நிஸ்ஸங்க தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
தொழில்துறை கண்காட்சிகள் முன்பும் நடந்துள்ளன. ஆனால் இம்முறை நடைபெறும் ‘Induiry Exe 2025” அளவிலும், உள்ளடக்கத்திலும் மிகப்பெரியதாகும். செப்டம்பர் 18 முதல் 21 வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும் கண்காட்சியில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 450 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
வெளிநாட்டு பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர்ஆகியோர் அனைவரும் நேரடியாக சந்திக்கக் கூடிய ஒரு தளமாக இது அமையும்.
இந்தக் கண்காட்சி வெறும் பொருட்கள் காட்சிப்படுத்தும் நிகழ்வாக அல்லாமல். புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறியும். தொழில்நுட்ப பரிமாற்றம் நடைபெறும். முதலீடுகளை ஈர்க்கும் மேடையாக இருக்கும் கைத்தொழில் அபிவிருத்திச் சபை (IDE) தலைவர் ரவி நிஸ்ஸங்காவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த Fuso 2025 நாட்டின் தொழில்துறை முன்னேற்றத்துக்கான முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
Expen 2025 ஒரு பார்வையில்.
இடம்: IMKCHI, கொழும்பு
நாட்கள்: செப்டம்பர் 18-21. 2025
கண்காட்சியாளர்கள்: இலங்கையும் வெளிநாடுகளிலிருந்தும் 45010
சிறப்பம்சங்கள்: B2B சந்திப்புகள். விற்பனையாளர் குழுக்கள். துறைவாரியான கருத்தரங்குகள். தொழில்நுட்பக் கண்காட்சிகள்
இலக்கு : ஏற்றுமதி உயர்த்துதல். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல். இலங்கையின் தொழில்துறை மதிப்பை உலகளவில் வலுப்படுத்தல்















