இலங்கையின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதி மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள தாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ODI Global நிறுவனத்தின் சிரேஸ்ட உறுப்பினர் கலாநிதி கணேசன் விக்னராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மாற்றத்தக்க பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்தல் 2025-2030 எனும் அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், இலங்கையில் நிலவும் இப்பிரச்சினைக்குத்
தீர்வுகாண பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். வறுமைப் பகுப்பாய்வு நிலையம் மற்றும் ODI Global நிறுவனத்தின் அனுசரணையில் சுயாதீனக் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் மாற்றத்தக்க பொருளாதார
வளர்ச்சியைத் தக்கவைத்தல் 2025-2030 எனும் அறிக்கை அண்மையில் கொழும்பு மன்றக் கல்லூரியில் வெளியிடப்பட்டது.


















