கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை மழையினால் தடைப்பட்டு மீண்டும் தொடர்ந்த ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கையை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 10 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றிகொண்டது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது.
சமரி அத்தப்பத்து 11, ஹசினி பெரேரா 4, கவிஷா டில்ஹாரி 13, ஹர்ஷித்தா சமரவிக்ரம 18 ஓட்டங்களும் எடுத்தனர்.
விஷ்மி குணரட்ன 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
நிலக்ஷிக்கா சில்வா 18 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் நொன்குலுலேக்கோ மிலாபா 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மசாபட்டா க்ளாஸ் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 20 ஓவர்களில் 121 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 14.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 125 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
லோரா வுல்வார்ட் 60, தன்ஸிம் ப்றிட்ஸ் 55 ஓட்டங்கள் எடுத்தனர். ஆட்ட நாயகியாக லோரா வுல்வார்ட் தெரிவானார்.















