-சிக்கந்தர் ராசா காட்டடி-
இலங்கை – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ரி-20 உலகக் கிண்ண போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது.

பெத்தும் நிஸ்ஸன்க மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 8 பவுண்டறிகளுடன் 60 ஓட்டங்களைப் பெற்றார்.
மத்திய வரிசையில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பவன் ரத்நாயக்க 44 ஓட்டங்களைப் பெற்றார்.
குசல் பெரேரா 22 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 14 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் 7 ஓட்டங்களையும், அணித் தலைவர் தலைவர் தசுன் ஷானக்க 6 ஓட்டங்களையும் பெற்றனர்.
துனித் வெல்லாலகே 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் க்றேம் க்ரேமர் 2 விக்கெட்களையும் ப்ளெசிங் முஸராபனி 2 விக்கெட்களையும் ப்றட் இவான்ஸ்2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து ஜிம்பாப்வே 179 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களத்தில் இறங்கிய ஜிம்பாப்வே 19.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்;கள் அடித்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ராசா 26 பந்துகளில் 45 ஓட்டங்கள் அடித்து ஜிம்பாம்பே அணியை வெற்றி பெறவைத்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.


















