இலங்கையின் அரச பாடசாலைகளில் ஹிந்தி கற்பிக்கும் ஆசிரியர்கள் முதன்முறையாக இந்தியாவில் பயிற்சிகளை பெறவுள்ளனர்.
அவர்கள், ஆக்ராவில் உள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தானில் சிறப்பு பயிற்சிகளை பெறுவார்கள் என்று இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரம் அறிவித்துள்ளது.
இதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட 35 ஆசிரியர் இந்தியாவுக்கு புறப்படும் முன்னர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவை சந்தித்து உரையாடியுள்ளனர்.
ஹிந்தி பாடம்
கொழும்பில் உள்ள சுவாமி விவேகானந்தா கலாசார மையத்தின் இணை ஏற்பாட்டில் இந்த பயிற்சிகள் இடம்பெறவுள்ளன.இதேவேளை, இலங்கை முழுவதும் 88 பாடசாலைகளில் ஹிந்தி ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது.
