இஸ்ரேலிற்கும் ஈரானிற்கும் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பது தெரியவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.(don’t know what the f— they’re doing)
இருதரப்பும் யுத்தநிறுத்தத்தை மீறியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
யுத்த நிறுத்தத்திற்கு இணங்கிய பின்னர் இஸ்ரேல் செயற்பட்ட விதம் குறித்து அவர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.ஈரானின் அணுஉலைகள் மீதான தாக்குதலின் பின்னர் அந்த நாட்டின் அணுசக்தி திறன் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானால் மீண்டும் அணுசக்தி திட்டத்தை முன்னெடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.