அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு எதிராகத் தொடுக்கும் தாக்குதல்களை தற்போது மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) மீது நடத்திய தாக்குதல்களுக்காக தாமாகவே தயாரித்த ‘கொரம்ஷார்-4’ (Khorramshahr-4) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் (Ballistic Missile) பயன்படுத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானால் தயாரிக்கப்பட்ட கொரம்ஷார் ஏவுகணையானது ஒரே நேரத்தில் பல இடங்களைத் தாக்கக்கூடிய அதிநவீன ஏவுகணையாகக் கருதப்படுகிறது.
13 மீற்றர் நீளம் கொண்ட இது, தோராயமாக ஒரு பேருந்தின் நீளத்தைக் கொண்டது.
அதிகபட்சமாக 2,000 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கக்கூடிய இந்த ஏவுகணை, 1.5 தொன் எடையுள்ள வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
2017ஆம் ஆண்டு முதல் ஈரானின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த போதிலும், இது 2023ஆம் ஆண்டிலேயே அவர்களால் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டது.

















