உடலில் இரத்த ஓட்டம் என்பது மிகவும் அவசியம். ஆனால், ஒரு சிலருக்கு இரத்தம் மிகவும் குறைவாக இருக்கும்.
யாருக்கெல்லாம் உடலில் இரத்தக் குறைபாடு ஏற்படும் எனப் பார்ப்போம்.

சரியான உணவு உண்ணாமல் இருப்பவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், தைரொய்ட் பிரச்சினை உள்ளவர்கள், சிறுநீரக குறைபாடுள்ளவர்கள், எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு இரத்தக் குறைபாடு ஏற்படும்.
குழந்தைகளுக்கு இரத்தம் சரியான அளவு இருக்க வேண்டுமானால் கீரைகள், பருப்பு, பால், மீன், முட்டை போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். காரணம் இவற்றில் புரதச்சத்து அதிகம் உள்ளது.

பேரீச்சை, முருங்கைக் கீரை போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.




















