உலகக் கிண்ண கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.
2022 ஆம் ஆண்டு போட்டியைவிட 16 அணிகள் கூடுதலாகும். போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், அவுஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ, துனிசியா, எகிப்து. அல்ஜீரியா,கானா ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.
இந்த நிலையில் 22 ஆவது நாடாக உலக கிண்ண கால்பந்து போட்டிக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கேப்வெர்டே நாடு தகுதி பெற்றது.
அந்த அணி எஸ்வதினியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் குரூப் டி பிரிவில் கேப்வெர்டே 23 புள்ளிகளை பெற்று உலக கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றது. கேப்வெர்டே முதல் முறையாக உலக கோப்பை போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து உலக கிண்ணப் போட்டிக்கு இதுவரை 6 நாடுகள் தகுதி பெற்றுள்ளன.


















