சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுத்துறை சம்மேளனத்தினால் ஜேர்மனியின் ரைன் ரூர் மெட்ரோபொலிட்டன் பிராந்தியத்தில் நடத்தப்படும் உலக பல்கலைக்கழக கோடைக்கால விளையாட்டு விழாவில் பங்குபற்றும் இலங்கை வீராங்கனை ரசாரா விஜேசூரிய, 10000 மீற்றர் ஓட்டப்போட்டியில் தேசிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.
திங்கட்கிழமை (21) நடைபெற்ற பெண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியை 32 நிமிடங்கள் 28.02 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார்.
எனினும் அப் போட்டியில் அவர் 8ஆம் இடத்தையே பெற்றார்.
பெண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஸ்லோவேக்கிய வீராங்கனை கே. லூக்கன் (31:25.84) தங்கப் பதக்கத்தையும் கென்ய வீராங்கனை எஸ். டபிள்யூ. நிஜேரி (31:41.80) வெள்ளிப் பதக்கத்தையும் ஸ்பானிய வீராங்கனை ஏ. பிரோசா மாட்டின் (32:00.73) வெண்கலப்பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
தென் கொரியாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 10000 மீற்றர் ஓட்டப் போட்டியை 33 நிமிடங்கள், 21.26 செக்கன்களில் நிறைவுசெய்து தனது முந்தைய தேசிய சாதனையை (33:39.10) ரசாரா விஜேசூரிய புதுப்பித்திருந்தார்.
ரசாரா விஜேசூரிய களனி பல்கலைக்கழக மாணவி ஆவார்.

















