மாலைதீவில் ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்ட மூலம் அங்கீகரிக்கப்படலாம் என்ற அச்சத்தில் பாராளுமன்றத்துக்கு வெளியே ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
பல்வேறு ஊடக அமைப்புகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் காலை 8:30 மணி முதல் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
எனினும் பொலிஸார் அவர்களை பாராளுமன்ற நுழைவாயிலில் இருந்து வலுக்கட்டாயமாகத் தள்ளிவிட்டு, அதன் சுற்றுப்புற வளாகத்தை சுற்றி கடுமையான பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, பாராளுமன்றுக்கு செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டுள்ளன.
இந்தச் சட்டமூலம் பத்திரிகைச் சுதந்திரத்திற்கு இடையூறாக இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் தெரியப்படுத்தியுள்ளதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன், இந்த சட்ட மூலத்தை இரத்து செய்யுமாறு 150 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கையொப்பமிட்ட மனுவொன்று ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் அதனை பொருட்படுத்தாமல் சட்ட மூலம் தொடர்பான செயல்முறைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
















