எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 8,355 தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வெளியிடப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு அமைய பொதுமக்களுக்கு தானசாலைகளை நடத்துமாறு அச்சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.
இந்த எசல பௌர்ணமி தானசாலைகள் இன்றைய தினம் இரவு வரை வழங்கப்படும் என சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.
எசல பௌர்ணமி தானசாலைகளை பரிசோதனை செய்யும் பணிகளில் சுமார் 2,000 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சமில் முத்துகுட மேலும் தெரிவித்துள்ளார்.


















