முன்னணி தென்னிந்திய நட்சத்திர நடிகரும், இயக்குநருமான எஸ். ஜே. சூர்யா கதையின் நாயகனாக நடித்து, இயக்கும் ‘ கில்லர் ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குநராக களம் இறங்கியிருக்கும் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் உருவாகும் ‘ கில்லர் ‘ திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா- ப்ரீத்தி அஸ்ராணி ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள்.
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை ஏஞ்சல் ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் மெக்சிகோ நாட்டில் நடைபெறும் என்றும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகனான எஸ் ஜே சூர்யாவும், நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ராணியும் தோன்றும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது எஸ் ஜே சூர்யாவின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

















