எஹெலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரியெல்ல வீதி தங்தெனிய பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர், எஹெலியகொட பஹலகம பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவர் ஆவார்.
எஹெலியகொடவிலிருந்து கிரியெல்ல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர் திசையில் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம், எஹெலியகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹெலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















