இந்த ஆண்டு வானில் கிரகங்களின் தொடர்ச்சியான அணிவகுப்பு நிகழ உள்ளது.
இது மிகவும் அரிதானதாக நிகழும் காட்சி என்பதால் பலரது ஆர்வத்தையும் தூண்டியுள்ளது
ஆரம்பத்தில் நான்கு கிரகங்கள் சூரியனின் நேர்கோட்டில் இருந்தன.
தற்போது அவற்றுடன் இரண்டு கிரகங்களும் இணைந்து 6 ஆகக் காட்சியளிக்கின்றன.
இன்று ஏழாவது கிரகமும் இவற்றின் நேர்கோட்டில் இணையும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கிரகங்களில் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை அடங்குகின்றன.
இந்த காட்சியை வெறுங்கண்ணால் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் ஐந்து கோள்களை மாலை 6:30 முதல் 7:10 வரை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் நிகழ்வு இனி 2040 ஆம் ஆண்டில் நிகழும் எனத் தெரிவிக்கப்படுகிறது.