விசுவமடு பகுதியிலிருந்த கண்டியில் இடம்பெற்ற மரணச் சடங்கிற்கு சென்று திரும்பிய விசுவமடு வாசிகள் பயணித்த பட்டா வாகனம் ஓமந்தை பகுதியில் ஏ-9 வீதியில் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் ஸ்தலத்தில் பலியானார்கள்.
நேற்று இரவு 7 அணியளவில் நடந்த கோரவிபத்தில் மேலும் 9 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
விசுவமடு பகுதியைச் சேர்ந்தவர்கள் 12 பேர் பட்டா வாகனத்தில் கண்டியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கிற்கு சென்று கலந்து கொண்ட பின்னர் நேற்றையதினம் திரும்பி வரும் வழியில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் எதிர்த்திசையில் வந்த டிப்பர் வாகனத்தோடு பட்டா வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இதன்போது இருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதோடு டிப்பர் வாகனசாரதியை கைதுசெய்தனர்.
குறித்த சம்பவத்தையடுத்து விபத்து இடம்பெற்ற இடத்தில் பொதுமக்கள் ஓன்றுகூடியதால் சலசலப்பு ஏற்பட்டது.


















