இலங்கை கடன் மறுசீரமைப்பு மூலம் மீட்சியடைந்து, நம்பிக்கையை கட்டியெழுப்பி வளர்ச்சிப் பாதையில் நுழைந்துள்ளதுளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஆலோசகரும், பணிப்பாளருமான டோபியாஸ் ஏட்ரியன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்தக் கூட்டத் தொடருக்கு இணையாக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வங்கி ஆளுநர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேர்காணலில் மேலும் தெரிவிக்கையில்,சந்தை அணுகலைக் கொண்ட குறைந்த வருமானம் பெறும் நாடுகளைப் பொறுத்தவரை, உலகளாவிய சந்தைகளில் நிதி நிலைமைகள் ஒப்பீட்டளவில் சாதகமாக இருப்பதாகத் தெரிகிறது. பணப்புழக்கம் மற்றும் சந்தையை அணுகும் திறன் இந்த ஆண்டில் உயர் மட்டத்தில் இருந்ததாகவும் கூறலாம்.
இலங்கையின் பொருளாதாரச் செயல்திறன் மேம்பட்டுள்ளது என்பதை என்னாலும் கூற முடியும். நீங்கள் கேட்டது போல், வளர்ந்துவரும் சந்தைகள் குறித்து பொதுவாகக் கூறினால், டொலரின் பெறுமதி ஒப்பீட்டளவில் பலவீனமடைந்திருப்பது வெளிப்புற அழுத்தங்களைக் குறைத்துள்ளது. இதன் மூலம் நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
வளர்ந்துவரும் சந்தை நாடுகள் அடிப்படைப் பொருளாதார விதிகளைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். நடப்புக் கணக்கு, வெளிநாட்டு கையிருப்புக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்குவதும் இதில் அடங்கும். குறிப்பாக, சந்தைக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம், வளர்ந்துவரும் சந்தைகள் உள்நாட்டிலேயே மூலதன நிதியைத் திரட்டிக்கொள்ள முடியும் – என்றார்.


















