கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 10,000 வெளிநாட்டு சிகரெட்களுடன் (50 காடுன்கள்) இன்று திங்கட்கிழமை (21) இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசிய தகவலின் அடிப்படையில் விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) அதிகாரிகள் குழு நடத்திய சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வவுனியா பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் ஆவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















