3வது பாதுகாப்பு சேவைகள் கராத்தே போட்டியில் இலங்கை இராணுவம், நான்காவது முறையாகவும் வெற்றி பெற்று பதக்கங்களை தக்கவைத்துள்ளது.
இந்த போட்டி கடந்த ஆகஸ்ட் 4 ,5 ஆம் திகதிகளில் பனாகொட இராணுவ பயிற்சிப் பாடசாலையில் உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இராணுவ வீரர்கள் ஆண்களுக்கான பிரிவில் 6 தங்க பதக்கங்கள், 8 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று, மொத்தமாக 58 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
7 ஆண்களுக்கான எடைப் பிரிவுகளில் 6 பிரிவுகளில் இராணுவ வீரர்களே முதலிடம் பிடித்துள்ளனர். இராணுவத்தின் இந்த சிறப்பான செயல்பாடே இந்த தொடர் வெற்றிக்கு காரணமாகும்.

கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்கள்:
குமித்தே (50kg இற்கு கீழ்): கோப்ரல் பிரியதர்ஷன – 19வது இலங்கை பாதுகாவலர் படையணி
குமித்தே (55kg இற்கு கீழ்): சார்ஜன்ட் பண்டார – 19வது இலங்கை பாதுகாவலர் படையணி
குமித்தே (60kg இற்கு கீழ்): கோப்ரல் டயஸ் – 8வது இலங்கை இலகு காலாட்படை
குமித்தே (67kg இற்கு கீழ்): கோப்ரல் சில்வா – 1வது இலங்கை பொறியியல் படை
குமித்தே (84kg இற்கு கீழ்): சார்ஜன்ட் கருணாரத்ன – 2வது (V) இலங்கை இராணுவ பொது சேவைப் படை
குமித்தே (50kg இற்கு கீழ்): சார்ஜன்ட் வீரசிங்க – 1வது இராணுவ பொலிஸ் படை
இராணுவ கராத்தே குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஆர்.டி.சல்லி, பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.
மேலும்,இந்நிகழ்வில், முப்படையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.


















