காசாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஹமாஸ் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை துறக்க வேண்டுமெனவும் எச்சரித்துள்ளார்.
காசாவின் 45 சதவீத பகுதிகளில் இருந்து இஸ்ரேல் இராணுவம் பின்வாங்கிய நிலையில், அந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நடவடிக்கைக்களை ஹமாஸ் அமைப்பினர் மேற்கொள்கின்றனர்.
போரின்போது இஸ்ரேல் இராணுவத்துக்கு உதவியதாக 8 பேரை, பொதுவெளியில், கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் ஹமாஸ் அமைப்பினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இது இவ்வாறிருக்க காசாவின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் ஆயுதக் குழுவினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் சண்டை நடந்துவருகிறது.
இந்நிலையிலேயே வாஷிங்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை துறக்காவிட்டால் இராணுவ நடவடிக்கை மூலம் ஆயுதங்களை துறக்க வைப்போம் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.


















