காலி துறைமுக பொலிஸ் பிரிவில் உள்ள மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி துறைமுக பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் புதன்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், தொடந்துவ மற்றும் சீனக்குடா ஆகிய பகுதிகளை சேர்ந்த 45, 54 மற்றும் 56 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடம் இருந்து, வெளிநாட்டு துப்பாக்கி, 09mm தோட்டாக்கள் 05 மற்றும் கார் ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















