பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் மற்றும் “கமாண்டோ சலிந்த” ஆகியோர் மலேசியாவில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பொலிஸார் இந்த நடவடிக்கை தொடர்பான மேலதிக தகவல்களை சர்வதேச பொலிஸாரிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“கெஹெல்பத்தர பத்மே” மற்றும் “கமாண்டோ சலிந்த” ஆகியோர் கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் ஆவர்.