கொழும்பில் பொரலெஸ்கமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்லன்வில பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் பெண் உட்பட மூவர் மன்னார் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (28) காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பெல்லன்வில மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 35 மற்றும் 49 வயதுடைய இரண்டு ஆண்களும் முங்வத்தை பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய பெண்ணொருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 1,330,420 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


















