‘அயோத்தி’, ‘கருடன்’, ‘நந்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என வரிசையாக வணிக ரீதியாகவும் , விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடத்தில் மீண்டும் முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும்’ ஃபிரீடம் ‘படத்தில் இடம்பெற்ற ‘ ஆரிரோ ஆராரிரோ ‘ எனும் இரண்டாவது பாடலும் பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சத்ய சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஃப்ரீடம் ‘ திரைப்படத்தில் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ், மாளவிகா அவினாஷ் , போஸ் வெங்கட் , ரமேஷ் கண்ணா , சுதேவ் நாயர் , ‘பாய்ஸ்’ மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
என். எஸ் .உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். ஈழ ஏதிலிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை விஜயா கணபதி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாண்டியன் பரசுராமன் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்..’ கண் முழிச்ச சொப்பனமே மின்னுதிங்கே உன் முகமே ..’எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும் பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார் தாலாட்டு + சோக சுவையும் மிகுந்த இந்தப் பாடலில் வைக்கம் விஜயலட்சுமி என் வசீகரிக்கும் குரலில் வெளியாகி இருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.