-அமெரிக்காவிற்கு ஈரான் அமைச்சர் பதில்-
அமெரிக்காவின் தற்போதைய பேச்சுவார்த்தை ஆர்வம் என்பது அவர்களின் தோல்வியை ஒப்புக்கொள்வதையே குறிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.
ஈரானை ‘நிபந்தனையற்ற முறையில் சரணடைய’ வைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் முந்தைய கோரிக்கைகளுடன் ஒப்பிடுகையில், தற்போது அவர்கள் காட்டும் பேச்சுவார்த்தை ஆர்வம் அவர்களின் தோல்வியையே பறைசாற்றுகிறது எனவும் அவர் கூறினார்.
மேலும், நட்பு நாடுகள் ஊடாக அமெரிக்காவிடமிருந்து பல்வேறு செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இருப்பினும், அவை முறையான பேச்சுவார்த்தைகளாக அமையாது என அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, ஈரான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை அராக்சியின் இந்த உரை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான இந்த இராஜதந்திர நகர்வுகள் சர்வதேச அரசியலில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன எனவும் தெரிவிக்கின்றன.


















