தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களின் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரிப் போட்டி நேற்று மன்னார் மாவட்ட மாட்டு வண்டி சவாரி சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நானாட்டான் வாழ்க்கை பெற்றான் கண்டல் இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் இடம்பெற்றது.
வடமாகாணத்தில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் மற்றும் உரிமையாளர்கள் குறித்த போட்டியில் கலந்து கொண்டனர்.

குறித்த போட்டியில் A.B பிரிவுகளில் கிளிநொச்சி மாவட்ட காளைகளும், C.D.E ஆகிய பிரிவுகளில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த காளைகளும் வெற்றியீட்டியது.
குறித்த போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.


















