சவுதி அரேபியாவில் ராட்டின ஒன்று இரண்டாக உடைந்து விபத்திற்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜெட்டா நகரத்தின் தைஃப்பின் அல் ஹடா பகுதியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து குறித்து பிராந்திய ஆளுநர் விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் இந்த பொழுதுபோக்கு பூங்காவை மூட உத்தரவிட்டுள்ளார்.


















