பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நேற்று திங்கட்கிழமை (04) முறைப்பாடு ஒன்று அளித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டியே பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க முறைப்பாடு அளித்துள்ளார்.
”2024 ஆம் ஆண்டில் இலங்கை பொலிஸ் பிரிவுக்கு புதிதாக 100 பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதற்காக வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டு தேர்வுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 100 பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதற்கு நவம்பர் மாதம் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தெரிவு செய்யப்பட்ட 100 பொலிஸ் அதிகாரிகளை நியமிக்காமல் மீண்டும் தேர்வுகளை நடத்தி புதிதாக 100 பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதற்கு புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எனவே பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலங்கை பொலிஸ் பிரிவுடன் தொடர்புடைய அமைச்சு மற்றும் பொலிஸ் பிரிவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார்.


















