முல்லா வாசிச்சுகிட்டு வந்த கிராமத்துல ஒரு தடவ ஒரு மிக பெரிய திருவிழாவுக்கு ஏற்பாடு செஞ்சாங்க

அதுல நிறய கூத்து கலைஞர்கள் வந்து கலந்துக்கிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்துனாங்க அப்பதான் முல்லாவுக்கு ஞாபகம் வந்துச்சு இன்னைக்கு திங்ககிழமை நாம் பக்கத்து ஊருக்கு போயி வியாபாரம் பார்க்குற நாள் ஆச்சேனு,

அடடா இன்னைக்கு சந்தை பகுதி எல்லாமே மிக கூட்டமா இருக்குமே நாம எப்படி இந்த கூட்டத்த கடந்து அடுத்த ஊருக்கு போறதுன்னு யோசிச்சாறு, அப்பதான் முல்லாவுக்கு ஒரு யோசனை வந்துச்சு, வியாபாரத்துக்கான எல்லா பொருளையும் கழுதை மேல ஏத்திக்கிட்டு அவரும் கழுதை மேல ஏறி உக்காந்துக்கிட்டாரு

கழுதைய வேகமா கூட்டத்துக்குள்ள ஓட விட்டாரு, கழுதை கூட்டத்தை பார்த்ததும் தறி கேட்டு ஓடுச்சு, இத பார்த்த ஊர் பெரியவங்க என்ன முல்லா எதாவது அவர்சரமான காரியமா, எவ்வளவு பேர தள்ளி விட்டுட்டு எங்க போறிங்கனு கேட்டாங்க

அதுக்கு முல்லா அத என் கழுதை கிட்ட கேளுங்க நான் சும்மா அதுமேல உக்காந்து இருக்கேன் அது எங்க என்ன இழுத்துகிட்டு போகுதுனு எனக்கும் தெரியாதுன்னு சொன்னாரு
அத கேட்ட கூட்டம் இவரு ஒரு முட்டாள் போலனு சிரிச்சிகிட்டே அவரு போறதுக்கு வழி விட்டாங்க,
இப்படித்தான் முல்லா யாரு கூடையும் சண்டை போடாம, யார் மனசையும் நோகடிக்காம, சந்தைல கூத்துப்பார்க்க வந்தவர்கள சமாளிச்சு அன்னைக்கு வியாபாரத்துக்கு போனாரு

















