காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதியிலிருந்து மதுபான போத்தல்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசி சார்ஜர் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இனந்தெரியாத நபர் ஒருவர் அண்மையில் காலி சிறைச்சாலையின் கூரை வழியாக சிறைச்சாலைக்குள் உள்ள தண்ணீர் தொட்டிக்கு அருகில் பொதி ஒன்றை வீசி சென்றுள்ளார்.
இதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பொதியை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, இந்த பொதியிலிருந்து 3 மதுபான போத்தல்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசி சார்ஜர் உள்ளிட்ட பொருட்கள் சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் காலி சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.