சுதந்திர வரத்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கு இந்தியாவும், கட்டாரும் இணக்கம் வெளியிட்டுள்ளன.
இந்திய மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயலும் கட்டாரின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஷேக் பைசல் பின் தானி பின் பைசல் அல் தானியும் இது தொடர்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இப்பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் கோயல், பேச்சுவார்த்தைகளை விரைவாகத் ஆம்பிக்க வேண்டும் என நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். விதிமுறைகளின் வரையறைகளை நாங்கள் விவாதித்து வருகிறோம். அதை நாங்கள் இறுதி செய்தவுடன், கட்டார் அமைச்சருடன் கலந்துரையாடி அதை விரைவுபடுத்துவோம். எங்களுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் வணிகத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 14 பில்லியன் டொலரில் இருந்து 30 பில்லியன் டொலராக இரட்டிப்பாக்க உத்தேசித்துள்ளோம் – என்றார்.


















