உலகம் முழுவதும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘கூலி’ திரைப்படம் – முதல் நாள் மட்டும் இந்திய மதிப்பில் 170 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கூலி ‘ திரைப்படம் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டது. கலவையான விமர்சனங்களையே பெற்றாலும் வசூலில் சுப்பர் ஸ்டார் தன்னுடைய ரசிகர்களை பட மாளிகைக்கு கவர்வதில் தவறவில்லை.
தொடர்ந்து விடுமுறை தினங்கள் என்பதால் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் ‘கூலி’ திரைப்படத்திற்கான முன் பதிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியான முதல் நாள் மட்டும் இந்திய மதிப்பில் 170 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும் என திரையுலக வணிகர்கள் தரவுகளின் அடிப்படையில் உறுதிப்பட தெரிவிக்கிறார்கள்.
இருப்பினும் படததை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















