பிரபாகரன்
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் புதிதாக 9 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன் ஒரு இடத்தில் 3 மனித எலும்பு கூட்டு குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 40ஆம் நாள் அகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.
இன்றைய அகழ்வின் போது ஒன்பது மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 218ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஏழு மனித என்புத் தொகுதிகள் நேற்றையதினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி புதைகுழியிலிருந்து இதுவரை மொத்தமாக 198 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய அகழ்வின் போது ஒரே இடத்தில் மூன்று மனித என்புத் தொகுதிகள் குவியல்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை தொடர்பான பரிசோதனைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.
நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன்
சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மருத்துவபீட மற்றும் கலைப்பீட தொல்லியற்துறை மாணவர்களும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகிவருகின்றனர்.






















